கல்வி

சென்னை | திறந்தநிலை பல்கலை. தேர்வு தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பருவத் தேர்வுகள் பிப்.1 முதல் நடத்தப்பட உள்ளன. இதற் கிடையே ஆசிரியர் பணிக்கான டெட் 2-ம் தாள் தேர்வு கடந்த பிப்.3- முதல் நடைபெற்று வருகிறது.

இவ்விரு தேர்வுகளும் ஒரே நாளில் வருவதால், குறிப்பிட்ட தேதியில் நடைபெற உள்ள பருவத் தேர்வுகளை மாற்றி வைக்க வேண்டுமென கோரிக்கைகள் வந்தன. அதன் அடிப்படையில் தமிழ்நாடு திறந்தநிலைபல்கலை பருவத் தேர்வை ஒத்தி வைத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘ பல்கலை. தேர்வுக்கால அட்டவணையில் பிப்.11, 12-ம் தேதிகளில் நடத்தப்படவிருந்த தேர்வுகள்ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நடைபெற இருப்பதால் அந்த தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் மே 6, 7-ம் தேதிகளில் நடைபெறும்’’ என்று கூறப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT