கல்வி

சுற்றுலா தலங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்: பல்கலை. மானியக் குழு உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: நாட்டின் பாரம்பரியமிக்க இடங்களுக்கு மாணவர்களை கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நம்நாட்டில் பல்வேறு பாரம்பரியமிக்க சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அதிக அளவிலான பயணிகள் சென்று வருகின்றனர். இந்தியாவின் பாரம்பரியம், வனவிலங்குகள், கட்டுமானக் கலைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களை சுற்றுலா தலங்களுக்கு கல்வி நிறுவனங்கள் அழைத்துச் செல்ல வேண்டும்.

நாட்டின் சிறப்புகளை மாணவர்கள் அறிய தேவையான நடவடிக்கைகளை உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த முன்னெடுப்பை ஆண்டு கல்விச் சுற்றுலாவாக கல்லூரிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சுற்றுலாதலம் குறித்து ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆகியவற்றை நடத்தலாம்.

மேலும், பாரம்பரிய சுற்றுலா அனுபவங்களை மாணவர்கள் தங்களின் சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் ஊக்குவிக்க வேண்டும். இதுதொடர்பாக மேற் கொண்டநடவடிக்கைகளையும் யுஜிசி தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர்ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT