பரிசளிப்பு விழாவில் வித்யாசாகர் பெண்கள் கல்லூரி துணை முதல்வர் என்.எஸ். சரவணன், பேராசிரியர்கள் ஜி.சுபா, கே.ஹேமாவதி, கே.லதா, எஸ்.எஸ்.கே.வி. பள்ளி முதல்வர் விஜயலட்சுமி, துணை முதல்வர் ரேவதி பங்கேற்றனர். 
கல்வி

வித்யாசாகர் கல்லூரி, ‘இந்து தமிழ் திசை’ நடத்திய விநாடி- வினா போட்டி பரிசளிப்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரி மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து பள்ளி மாணவிகளுக்கான விநாடி வினா போட்டியை நடத்தின. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி. மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு எஸ்.எஸ்.கே.வி. மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இவ்விழாவில் வித்யாசாகர் மகளிர் கல்லூரி துணை முதல்வர் என்.எஸ்.சரவணன், பள்ளி உதவித் தலைமையாசிரியர் ரேவதி மற்றும் பேராசிரியர் ஜி.சுப, கே.ஹேமாவதி, கே.லதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT