கல்வி

கோவை | சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் ‘ஒரு நாள் ஆட்சியர்’ போட்டி

செய்திப்பிரிவு

கோவை: சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவி களுக்கு ஒரு நாள் ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் என்ற போட்டி நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "யங் இந்தியன்ஸ் அமைப்புடன் இணைந்து ஒரு நாள் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் என்ற நிகழ்ச்சி, கோவை விழாவின் 15-வது பதிப்பில் நடத்தப்படுகிறது. இது கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான போட்டியாகும்.

மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். திடக்கழிவு மேலாண்மை, மின் ஆளுமை, போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்பு, விபத்தில்லா சாலைகள், இணையப் பாதுகாப்பு, நீர் மேலாண்மை தொடர்பான பிரச்சினைகளை மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் கோவை மாநகராட்சி கண்டறிந்துள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு மாணவர்கள் புதுமையான தீர்வுகளை வழங்க வேண்டும். இப்போட்டியில் பங்கேற்க கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, கூகுள் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 19. இரண்டு நிலைகளில் போட்டி நடைபெறும். அரையிறுதி போட்டி ஜனவரி 21ம் தேதியும், இறுதிப்போட்டி ஜனவரி 26ம் தேதியும் அகாடமி வளாகத்தில் நடைபெறும்.

வெற்றி பெறுவோர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையருடன் ஒரு நாள் செலவிடலாம். வெற்றி பெறுபவர்கள் மற்றும் இறுதிப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் படிப்புகளுக்கு, 100 சதவீதம் வரை உதவித் தொகை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 99945 51898, 98407 02761 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT