பிரதிநிதித்துவப் படம் 
கல்வி

10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு - தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் நாளைக்குள் (ஜன.3) விண்ணப்பங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. பொதுத் தேர்வெழுத விரும்பும் நேரடி தனித்தேர்வர்கள் இணையவழியில் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்படி, நடப்பாண்டு தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிச.26-ம் தேதி தொடங்கியது.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசின் சேவை மையங்களுக்கு நேரில் சென்று தேர்வர்கள் விண்ணப்பங்களை இணையவழியில் பதிவு செய்து வருகின்றனர். இதற்கான கால அவகாசம் நாளையுடன் (ஜன.3) நிறைவுபெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் துரிதமாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில் தட்கல் திட்டத்தின்கீழ் ஜன.5, 6, 7-ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். எனினும், அதற்கு அபாராதமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம், கால அட்டவணை, வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் அறியலாம்.

SCROLL FOR NEXT