சென்னை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு இந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது. ஐஏஎஸ்,ஐபிஎஸ் போன்ற 1,011 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இத்தேர்வு முடிவுகள் ஜூன் 22-ம் தேதி வெளியாகின.
அதன் மூலம் இந்தியா முழுவதும் 13,091 பேர் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதன் முடிவுகள் நேற்று முன்தினம் (டிச.6) வெளியாகியுள்ளன. முதன்மைத் தேர்வில் 2,591 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் சுமார் 90 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி கிளைகளில் பயின்ற 215 பேர் முதன்மைத் தேர்வில் தேர்வாகியுள்ளனர். முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக முன்னாள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சேர்மன் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 18 பேர் அடங்கிய குழு மாதிரி நேர்முகத் தேர்வை நடத்தி வருகி்றது.
இந்த ஆண்டும் இக்குழுவின் மூலம் சிறப்புப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் மாதிரி நேர்முகத் தேர்வில் பங்கு பெற 9444227273 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வில் பங்கு பெறும் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் பூமிநாதன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.