கல்வி

பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படும்

செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகையை தொடர்ந்து வந்த திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதை ஈடுசெய்ய நாளை சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்பட உள்ளன.

தீபாவளி அக். 24-ம் தேதி (ஞாயிறு)கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தீபாவளி விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வசதியாக, அக். 25-ம் தேதி (திங்கள்) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை (நவ.19) சனிக்கிழமை பணி நாளாக அனுசரிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்அடிப்படையில், நாளை தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT