கல்வி

நிஃப்ட் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் ஃபேஷன் டிசைனிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. மத்திய அரசின் தேசிய ஃபேஷன் டிசைனிங் கல்வி நிறுவனத்தில் (நிஃப்ட்) ஃபேஷன் வடிவமைப்பு, அணிகலன் வடிவமைப்பு உள்ளிட்ட இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் nift.ac.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் மார்ச் மாதமும், அடுத்ததாக நேரடி தேர்வு ஏப்ரல் மாதமும் நடைபெற உள்ளன.

SCROLL FOR NEXT