சென்னை: பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வு முகமை(என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்)2 முறை கணினி வழியில் நடத்தப்படும். கரோனா நோய்பரவலால் கடந்த டிசம்பரில் நெட் தேர்வு நடத்தப்படவில்லை.
இதையடுத்து ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் நெட் தேர்வு இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வை நாடு முழுவதும் 5 லட்சத்து 44,485 பட்டதாரிகள் எழுதியிருந்தனர். இவர்களின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.
அதன்படி தேர்வெழுதியதில் 52,201 (9.5%) பட்டதாரிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பட்டதாரிகள் தங்கள் முடிவுகள், கட்ஆப் மதிப்பெண் விவரங்களை https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற தளத்தில் அறியலாம்.