திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது.
பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித் தொகை ரூ.750, பாடப் புத்தகங்கள், சீருடை உள்ளிட்டவை வழங்கப்படும். கம்மியர் கருவிகள், கோபா, செயலகப் பயிற்சி, கட்டிடப்பட வரைவாளர், தையல் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.