மாட்டு வண்டியில் செல்லும் மாணவிகள். 
கல்வி

இந்தியாவிற்காக ‘ஆசாதிசாட்’ கட்டமைத்த ஊரக பள்ளி மாணவிகளின் கவனம் ஈர்த்த போட்டோ ஷூட்!

செய்திப்பிரிவு

சர்வதேச ஊரக பெண்கள் தினமான இன்றைய நாளின் சிறப்பை எடுத்து சொல்லும் வகையில் இந்தியாவின் ஊரகப் பகுதி பள்ளி மாணவிகள் இணைந்து தனித்துவமிக்க சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். அதன் மூலம் அவர்கள் இந்த உலகிற்கு உரத்த குரலில் செய்தியும் சொல்லியுள்ளார்.

இந்திய நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக காஷ்மீர் முதல் குமரி வரையில் உள்ள 75 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகளின் முயற்சியினால் ‘கியூப் சாட்’ என சாட்டிலைட் வடிவமைக்கப்பட்டது. அதோடு இது விண்ணிலும் ஏவப்பட்டது. இருந்தாலும் எஸ்எஸ்எல்வி கோளாறு காரணமாக விண்வெளியில் இந்த சாட்டிலைட் மாயமானது.

பெண் பிள்ளைகளை அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணிதம் சார்ந்த கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் ஈடுபட செய்ய வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா இணைந்து முன்னெடுத்த முயற்சி இது.

இந்தச் சூழலில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ஒரு சிறப்பு போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளது. அதில் இந்தியாவின் பலம் மற்றும் விண்வெளி அறிவியல் சார்ந்த திறனை வெளிக்காட்ட முயற்சி செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டோ ஷூட்டில் ஆசாதிசாட் கட்டமைப்பு பணியில் ஈடுபட்ட 6 மாணவ விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா தலைவர் டாக்டர் ஸ்ரீமதி கேசனும் பங்கேற்றுள்ளார். இந்தியா உலகின் கலாசார தலைமையகம் மட்டுமல்ல, அறிவியல் தலைமையகமும் கூட என் சொல்லும் வகையில் உள்ளது.

SCROLL FOR NEXT