கல்வி

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,457 பேர் என மொத்தம் 36,100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று வெளியிடுகிறார். அப்போதே, கலந்தாய்வு குறித்த அறிவிப்பையும் வெளியிடுகிறார்.

SCROLL FOR NEXT