கல்வி

‘யசஸ்வி’ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய சமூக நீதி அமைச்சகம் சார்பில், ‘யசஸ்வி’ எனும் இளையசாதனையாளருக்கான பிரதமர்‌ கல்வி உதவித் தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளிகளில் 9, 11-ம் வகுப்புகளில் பயிலும், பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான தகுதித் தேர்வு வரும் 25-ம் தேதிகணினிவழியில் நடக்க உள்ளது.

தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும் இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 5-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் https://yet.nta.ac.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல்இருக்க வேண்டும். வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது.ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இத்தேர்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT