கல்வி

காய்கறி சந்தையில் பணி செய்துகொண்டே படிப்பு - மாநில அளவிலான போட்டியில் வென்ற காமராஜர் பல்கலை. மாணவருக்கு பாராட்டு

என். சன்னாசி

திண்டுக்கல்: காய்கறி மார்க்கெட்டில் பணி செய்துகொண்டே படிக்கும் காமராசர் பல்கலைக் கல்லூரி மாணவர், மாநில கட்டுரைப் பேட்டியில் சாதனை படைத்துள்ளார். அவரை துணைவேந்தர் ஜெ.குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர் அலுவலகம் சார்பில், மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி சமீபத்தில் நடந்தது. ‘ 2047-ல் இந்தியா’ எனும் தலைப்பில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் திண்டுக்கல் மாலை நேரக் கல்லூரியில் முதுநிலை இரண்டாமாண்டு கணிதம் பயிலும் எஸ்.ஜோதிராம் என்ற மாணவர் மாநில அளவில் மூன்றாம் பரிசு பெற்றார்.

அவருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த மாணவர் தனது குடும்ப பொருளாதார கஷ்ட சூழல் காரணமாக திண்டுக்கல்லிலுள்ள காந்தி காய்கறி மார்க்கெட்டில் பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டே படிக்கிறார் என்பது தெரிந்தது.

இம்மாணவரின் சாதனையை மதுரை காமராசர் பல்கலை துணைவேந்தர் ஜெ.குமார், பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார், டீன் சதாசிவம், மாலை நேரக் கல்லூரி இயக்குநர் மேகராஜன் உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டினர்.

SCROLL FOR NEXT