கல்வி

பொறியியல் கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (ஆகஸ்ட் 16) வெளியிடப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 434 பொறியியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளுக்கு 2.10 லட்சம் இடங்கள்உள்ளன. இதன் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு இணையவழியில் வரும் 20-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கு 1.58 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தகுதி பெற்ற மாணவ,மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு உட்பட சிறப்புபிரிவுக்கான கலந்தாய்வு வரும் 20 முதல் 23-ம்தேதி வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு,பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 25-ம்தேதி முதல் அக்.21-ம் தேதி வரை பல சுற்றுகளாக நடக்க உள்ளது. அதற்கேப மாணவர்கள்முன்தயாரிப்பு பணிகளை முடித்து தயாராக இருக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT