கல்வி

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பாலினவியல் படிக்க விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பாலினவியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் கூறியது:

முதுநிலை பாலினவியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இப்பட்டப்படிப்பு, பல்துறைசார் கல்விப்புலமாக இருப்பதால், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான சமூகப் பாலின தேவைகளை திட்டமிடல், கொள்ளை உருவாக்கம் போன்ற செயல்பாட்டு திறன்களை பெற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், பாலின சமத்துவ கண்ணோட்டத்தை உருவாக்க மாணவர்களுக்கு பல்வேறு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுவதால், ஐ.நா. நிறுவனங்கள், உலக சுகாதார நிறுவனம் மற்றும்தேசிய அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம், மாற்றுத் திறனாளிகளுக்கான அமைச்சகம் என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் அரசு கல்வி உதவித்தொகையும் அளிக்கப்படுகிறது.

படிக்கும்போதே துறைசார்ந்த ஆய்வுத் திட்டங்களில் பகுதிநேரப் பணியும் அளிக்கப்படுகிறது.

இந்த முதுநிலை பாலினவியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் www.bdu.ac.in இணையதளம் மூலமாக ஆக.16-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT