கல்வி

பீடித் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பீடிசுற்றும் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 2022 -23-ம் நிதியாண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் 2022-2023- ம் நிதி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

இதற்காக https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை, சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர். மேலும் விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

வகுப்பு 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 30. மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 31

கூடுதல் விவரங்கள் பெற அணுக வேண்டிய முகவரி : மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா கிண்டி, சென்னை – 600032.
மின்னஞ்சல் - scholarship201718tvl@gmail.com.
தொலைபேசி எண்: 044-29530169

SCROLL FOR NEXT