கல்வி

இந்திய மாணவர்களுக்கு விரைவாக விசா வழங்கப்படும்: ஆஸ்திரேலியா உறுதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய மாணவர்களுக்கு விரைவாக விசா வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அளித்துள்ள உறுதிமொழிக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியப் பணியாளர்களின் உலகத்தரம் வாய்ந்த திறனில் இணைந்து செயல்படுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆஸ்திரேலிய கல்வித் துறை அமைச்சர் ஜேசன் க்ளாருடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ஆஸ்திரேலியாவில் புதிதாக பதவியேற்றுள்ள தொழிலாளர் கட்சி அரசில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள க்ளாருக்கு, தர்மேந்திர பிரதான் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த ஆலோசனையின்போது, இந்திய மாணவர்களுக்கு விரைவாக விசா வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த முடிவை மனபூர்வமாக வரவேற்பதாகக் கூறிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், திறன் உயர்கல்வி, பள்ளிக்கல்வி உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவது குறித்து எடுத்துரைத்து, புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்தும் ஆஸ்திரேலிய கல்வி அமைச்சருக்கு விளக்கினார் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT