சென்னை: வேலைவாய்ப்பு, பயிற்சி துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மண்டல இணை பயிற்சியாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
ஐடிஐ முடித்த மாணவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான கல்வி சான்றிதழ் பெற, மொழிப் பாடங்களில் தேர்ச்சி அடைய வேண்டும். அதன்படி 10, 12-ம் வகுப்புகளுக்கான துணை தேர்வுகள் ஜூலை, ஆகஸ்டில் நடக்க உள்ளன.
எனவே, ஆர்வம் உள்ளவர்கள் தமிழ், ஆங்கிலப் பாடத் தேர்வுகளில் பங்கேற்க ஜூலை 17-ம் தேதிக்குள் (இன்று) சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு இதை தெரிவிக்குமாறு அனைத்து தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.