கல்வி

நாளை நீட் தேர்வு - 18.72 லட்சம் பேர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை (ஜூலை 17) நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் 497 நகரங்களில் நடைபெறவுள்ள இந்த தேர்வை 18.72 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1.42 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஹால் டிக்கெட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, தேர்வு மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் சென்றுவிட வேண்டும். ஆடை கட்டுப்பாடு உட்பட இதர வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும்.

மேலும், கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்றஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT