சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரித் தண்டலர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் 24-ம் தேதி நடக்கவுள்ளது.
இந்நிலையில், குரூப்-4 தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் தங்கள்ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். தேர்வின்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், தேர்வு மைய விவரம் ஆகியவை ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ளன.