கல்வி

நாடு முழுவதும் ஜூலை 17-ல் நீட் தேர்வு: ஹால்டிக்கெட் இன்று வெளியாக வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழுவதும் எம்பிபிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர, தேசிய தகுதி மற்றும்நுழைவுத் தேர்வில் (நீட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசியதேர்வுகள் முகமை (என்டிஏ)சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் ஜூலை 17-ம் தேதி நேரடி முறையில் நடக்கஉள்ளது.

இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72,339 பேர் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 2 லட்சத்து 57,562 கூடுதலாகும். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 42,286 பேர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் கடந்த ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் இன்று(ஜூலை 11) வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹால்டிக்கெட்கள் இணையத்தில் வெளியிடப்படும். அதை http://neet.nta.nic.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT