வேலூர் விஐடியில் நடைபெற்ற ஆன்லைன் நுழைவுத் தேர்வை விஐடி துணைத் தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். 
கல்வி

விஐடியில் பி.டெக். படிப்புக்கான நுழைவு தேர்வு தொடக்கம்: ஜூலை 8-ம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நேற்று தொடங்கி வரும் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கணினி வழியில் நடைபெறும் நுழைவுத் தேர்வு துபாய், குவைத், மஸ்கட், கத்தார் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்கள் என மொத்தம் 123 மையங்களில் நடைபெற்று வருகிறது.

நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூலை 8-ம் தேதி www.vit.ac.in http://www.vit.ac.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கும். வேலூர் விஐடி வளாகத்தில் உள்ள நுழைவுத் தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வை விஐடிதுணைத் தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் ராம் பாபு கோடாளி,இணை துணை வேந்தர் நாராயணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

கட்டண சலுகை

விஐடியில் ஜி.வி. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு கல்வி உதவி திட்டத்தின் கீழ் மத்திய, மாநில கல்வி வாரியத்தின்பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு பி.டெக். பொறியியல் படிக்க 4 ஆண்டுகளுக்கு 100 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும்.

விஐடி நுழைவுத் தேர்வில் முதல் 50 தரவரிசையில் இடம்பெறும் மாணவர்களுக்கு 75 சதவீதம், தரவரிசையில் 51 முதல்100 வரை இடம்பெறும் மாணவர்களுக்கு 50 சதவீதம், தரவரிசையில் 101 முதல் 1,000 வரை இடம்பெறும் மாணவர்களுக்கு 25 சதவீதம் கல்வி கட்டண சலுகை 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் விஐடியில் படிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீதம் கல்வி கட்டண சலுகையுடன் உணவு மற்றும் விடுதி வசதியுடன் விஐடியில் இலவச சேர்க்கை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT