சென்னை: நடப்பாண்டுக்கான நீட், ஜேஇஇ மற்றும் மத்திய பல்கலை. பொது நுழைவுத் தேர்வு (சியுஇடி) ஆகியவை ஜூலையில் நடக்கின்றன.
இதற்கான தேர்வுகால அட்டவணை என்டிஏ சார்பில் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. இந்நிலையில், நீட், சியுஇடி தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள், சமூகவலைதளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்தனர்.
எனினும், தேர்வு தேதிகளில் மாற்றம் செய்ய முடியாது என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்டிஏ அதிகாரிகள் கூறும்போது, ‘‘கல்வியாண்டு தாமதத்தைக் கருத்தில் கொண்டு தேர்வை தள்ளிவைக்க முடியாது. ஏற்கெனவே திட்டமிட்டபடி நீட் தகுதித் தேர்வு ஜூலை 17-ல் நடத்தப்படும்.
இதேபோல, சியுஇடி நுழைவுத் தேர்வு ஜூலை 15-ம் தேதியும், ஜேஇஇ முதல்நிலை 2-ம் கட்டத் தேர்வு ஜூலை 21-லும்தொடங்கும்’’ என்றனர்.