சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்தமே 10 முதல் 31-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 8.30 லட்சம்மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும்www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல்மையம், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் கைபேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.