கல்வி

‘அமிர்தா’, ‘இந்து தமிழ் திசை’ சார்பில் திருச்சியில் ஜூலை 3-ம் தேதி ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டு நிகழ்வு

செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்து எங்கு, என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டும் வகையில் அமிர்தா விஷ்வ வித்யாபீடம், ‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் வழிகாட்டு நிகழ்வை வரும் ஜூலை 3-ம் தேதி திருச்சியில் நடத்த உள்ளது. இந்த நிகழ்வு திருச்சி வயலூர் சாலையில் உள்ள ரெட்டை வாய்க்கால் (மல்லியம்பத் தபால் நிலையம்) சோழங்கநல்லூரில் உள்ள அமிர்தா வித்யாலயத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இதில், தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப கவுன்சில் துணைத் தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் பி.டெக்., (சேர்க்கை) தலைவர் மகேஸ்வர சைதன்யா, NIT வாரங்கல் முன்னாள் மாணவரும், தொழில் வழிகாட்டல் நிபுணருமான பொறியாளர் ஆர்.அஸ்வின் ஆகியோர் பங்கேற்று, ஆலோசனைகள், வழிகாட்டுதலை வழங்க உள்ளனர்.

பிளஸ் 2 முடித்த பிறகு படிக்க வேண்டிய படிப்புகளான இன்ஜினீயரிங், பிஸிக்கல் சயின்ஸ், மாஸ் கம்யூனிகேஷன், ஃபுட் சயின்ஸ், ஆங்கில மொழி, இலக்கியம் ஆகிய பாடங்கள் குறித்தும், அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது.

அமிர்தாவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வாய்ப்போடு, ரோபோக்கள் உட்பட மாணவர்கள் திட்ட கண்காட்சியையும் காணலாம்.

இந்நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை.

SCROLL FOR NEXT