கல்வி

குடிமைப்பணி முதல்நிலை தேர்வு - சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் 927 பேர் தேர்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2022-ம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

முதல்நிலைத் தேர்வை 5.5 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இதில் 13,090 பேர் முதன்மை தேர்வுக்கு தகுதிபெற்றுள்ளனர். இதில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் அனைத்து கிளைகளிலும் (சென்னை, டெல்லி, திருவனந்தபுரம், பெங்களூரு) பயிற்சி பெற்ற 927 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர்.

இவர்களில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல் முயற்சியிலேயே முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. தமிழகத்திலி ருந்து 610 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 360 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் என்று சங்கர் ஐஏஎஸ் அகாடமி தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT