வேலூர்: இந்திய அளவிலான யுபிஎஸ்சி தேர்வில் ஐந்தாமிடம் பிடித்த விஐடி முன்னாள் மாணவர் உத்கர்ஷ் திவேதியை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பாராட்டினார்.
சமீபத்தில் இந்திய அளவில் நடைபெற்ற குடிமைப் பணிக்கான தேர்வில் (யுபிஎஸ்சி) உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஐடி முன்னாள் மாணவர் உத்கர்ஷ் திவேதி இந்திய அளவில் ஐந்தாமிடம் பிடித்துள்ளார். அவரை, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பாராட்டினார். அப்போது, ‘‘குடிமைப் பணியில் தான் நாட்டில் மாற்றத்தை உருவாக்கி மக்களுக்கு உதவிட முடியும்.
அதேபோல், சமுதாயத்தில் என்னால் முடிந்த பணிகள் மூலம் நாட்டின் வளர்ச்சி பாதைக்கு உதவிட முடியும். வி.ஐ.டி பல்கலையில் படித்தபோது பல மாணவ அமைப்புகளில் உறுப்பினராக சேர்ந்து அவற்றின் வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சிகளின் மூலம் தலைமை பண்பை வளர்த்துக்கொண்டேன்’’ என உத்கர்ஷ் திவேதி தெரிவித்தார்.