சென்னை: ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு மைய விவரங்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ தேர்வில், முதல்நிலைத் தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் வரும் ஜூன் 23 முதல் 29-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளன.
இதற்காக நாடு முழுவதும் 501 நகரங்களில் தேர்வு மையங்கள் தற்போது அமைக்கப்பட்டுஉள்ளன. இந்நிலையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரங்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.
அவற்றை jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை என்டிஏ இணையதளத்தில் (http://www.nta.ac.in/) அறியலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.