கல்வி

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச வழிகாட்டும் முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் ஐஏஎஸ் தேர்வுக்கான வழிகாட்டும் முகாம் நாளை (ஜூன் 12) நடைபெறுகிறது.

இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கான தேர்வை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து வழிகாட்டும் முகாமில் விளக்கப்படுகிறது.

மேலும் நேர மேலாண்மை, ஆதார நூல்கள், நாளிதழ்களில் இருந்து குறிப்பெடுத்தல், எழுத்துப் பயிற்சி போன்றவை குறித்துதேர்வர்களுக்கான சந்தேகங்களுக்கு குடிமைப் பணித்தேர்வில் சமீபத்தில் வெற்றி பெற்ற பூரணசுந்தரி, எஸ்.மதிவாணன் ஆகியோர் பதிலளிக்கின்றனர்.

வழிகாட்டும் முகாமில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகளுக்கான கையேடு வழங்கப்படும். இம்முகாமில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 2165, எல்.பிளாக், 12-வது பிரதான சாலை, அண்ணாநகர் என்ற முகவரியில் நேரில் வந்து முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 7448814441 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SCROLL FOR NEXT