விருதுநகரில் குரூப் 2 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி. 
கல்வி

விருதுநகர் மாவட்டத்தில் குரூப் 2 தேர்வுக்கு 137 மையங்கள் தயார்

செய்திப்பிரிவு

விருதுநகர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இம்மாதம் 21-ம் தேதி நடத்தப்படும் குரூப் 2 தேர்வு விருதுநகர் மாவட்டத்தில் 137 மையங்களில் நடைபெறுகின்றன. இம்மாவட்டத்தில் 39,795 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 21-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு குறித்து தேர்வுக்கூட முதன்மைக் கண்காணிப்பாளர்கள், நடமாடும் குழுக்கள், பறக்கும்படை மற்றும் ஆய்வு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நடந்தது.

ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 137 தேர்வு மையங்களில் 39,795 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு நடைபெறும் மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 137 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 199 ஆய்வு அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் 26 நடமாடும் குழுக்களும், துணை ஆட்சியர் நிலையில் 13 பறக்கும் படை அலுவலர்களும், 143 வீடியோ கலைஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுத வருவோர் கால்குலேட்டர், மொபைல்போன் போன்றவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு வர அனுமதிக்கக் கூடாது என்று பேசினார்.

SCROLL FOR NEXT