கல்வி

அரசு ஐடிஐ-களுக்கு 24 இன்ஜின்கள் வழங்கிய ஹூண்டாய்

செய்திப்பிரிவு

சென்னை: ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் அறக்கட்டளை தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களின் கற்றலுக்காக 24 வாகன இன்ஜின்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டாரின் அறக்கட்டளை அமைப்பின் அறங்காவலர் கணேஷ் மணி கூறும்போது, ‘மாணவர்களுக்கு நவீன வாகன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் நோக்கில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுடன் (ஐடிஐ) இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

தற்போது தொழில்துறையில் தேவைப்படும் திறன்களை மாணவர்களிடம் வளர்க்கச் செய்வதே எங்கள் நோக்கம். இதனால் மாணவர்கள் எளிதில் வேலைவாய்ப்பைப் பெற முடியும்’ என்றார்.

SCROLL FOR NEXT