திண்டுக்கல்: தமிழகத்தில் அனைத்து பள் ளிகளிலும் மாணவ - மாண விகளுக்குத் தேவையான பாட நூல்கள், அந்தந்த மாவட் டங்களில் தயார் நிலையில் வைக் கப்பட்டுள்ளன. இவை ஜூன் முதல் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்கில் பாடநூல்கள் வைக்கப்பட்டுள் ளதை, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி நேற்று ஆய்வு செய்தார். புத் தகங்கள் பாதுகாப்பாக வைக்க ப்பட்டுள்ளதா, சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறதா என ஆய்வு செய்த அவர் அதிகாரிகளிடம் புத்தகங்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவிகளுக்குத் தேவையான தமிழ் மற்றும் ஆங்கில வழி பாட நூல்கள் தயாராக உள்ளன. அரசு பள்ளிகள் மற்றும் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய பள்ளிகள் என கல்வி நிறுவனங்களுக்கும் தேவையான பாடநூல்கள் ஜூன் முதல் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.