ஈரோடு: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோட்டில், 25-ம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராமநிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி வசூலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 7301 பணிக்காலியிடங்களுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளன.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த வர்களுக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள், 25-ம் தேதி முதல் நடக்கிறது.
கூடுதல் விபரங்களுக்கு 0424-2275860 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.