கல்வி

சென்னை பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. சேர்க்கைக்கு ஜன. 31 வரை அவகாசம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. சேர்க்கைக்கான காலஅவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி, பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘நடப்பு கல்வி ஆண்டுக்கான முனைவர் படிப்புக்கு (பிஎச்.டி.) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில், தற்போதைய கரோனா பரவல் சூழல் காரணமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜன 31-ம் தேதி வரை முனைவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT