கோப்புப் படம்

 
கல்வி

மாணவர்களுக்கு வழங்க 4.11 கோடி பாடநூல்கள்: பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை: 2026-27-ம் கல்​வி​யாண்​டில் 1 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்கு வழங்​கு​வதற்​காக, 4.11 கோடி பாடநூல்​கள் அச்​சிடப்​பட்டு பள்ளி​களுக்கு அனுப்​பும்பணி​கள் முடுக்கி விடப்​பட்​டுள்​ளன.

தமிழக பள்​ளிக் கல்​வித் துறை​யின் கீழ், 44 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான அரசு மற்​றும் நிதி​யுதவி பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 70 லட்​சம் மாணவ, மாணவி​கள் படிக்​கின்​றனர். இவர்​களுக்​கான பாடநூல்​கள் அச்​சிடும் பணியை தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வி​யியல் பணி​கள் கழகம் மேற்​கொண்டு வரு​கிறது. அரசு மற்​றும் நிதி​யுதவி பெறும் பள்​ளி​களின் மாணவர்​களுக்கு இலவச​மாக​வும், தனி​யார் பள்​ளி​களுக்கு குறைந்த விலை​யிலும் புத்​தகங்​கள் வழங்​கப்​படு​கின்​றன.

அதன்​படி, வரும் 2026-27-ம் கல்​வி​யாண்​டில் மொத்​தம் 4.11 கோடி பாடநூல்​கள் அச்சிட்டு வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் 88 சதவீதப் பணி​கள் முடிவுற்​றுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இதுகுறித்​து, பள்​ளிக்கல்​வித் துறை அதி​காரி​கள் கூறியதாவது: நடப்​பாண்டு அரசு, அரசு உதவி பள்​ளி​களுக்கு வழங்​கு​வதற்​காக 2.71 கோடி புத்​தகங்​கள், விற்​பனைக்​காக 1.4 கோடி புத்​தகங்​கள் என மொத்​தம் 4.11 கோடி பாடநூல்​கள் அச்​சிடப்பட்டு பள்​ளி​களுக்கு வழங்​கப்படவேண்​டும். இதில் 1, 2, 3-ம் வகுப்பு தவிர, இதர வகுப்​பு​களுக்​கான பாடநூல்​கள் தயாரிக்​கப்​பட்​டு,அந்தந்த மாவட்ட கிடங்​கு​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளன. அங்​கிருந்து பள்​ளி​களுக்கு விநி​யோகம் செய்​யும் பணி​கள் தற்​போது முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன.

1, 2, 3-ம் வகுப்​பு​களுக்கு நடப்​பாண்டு புதிய பாடத்​திட்​டம் அறி​முகம் செய்​யப்பட உள்​ளது. அவற்​றின் பாடநூல்​கள் தயாரிப்பு முடி​யும் தரு​வா​யில் உள்​ளது. எனினும், அந்​தப் பணி​களும் விரைந்து முடிக்​கப்​பட்டு பள்​ளி​கள் திறக்​கப்​படும் நாளில் அனைத்து வகுப்​பு​களுக்​கும் பாடப் புத்​தகங்​கள் விநி​யோகிக்​கப்​படும்.

இதுத​விர, தனி​யார் பள்ளி மாணவர்​களுக்​கான பாடநூல்​கள் விற்​பனை ஏப்.10-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. சென்​னை​யில் நுங்​கம்​பாக்​கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்​றாண்டு நூலகம், அடை​யாறு பாடநூல் விற்​பனை கிடங்கு ஆகிய​வற்​றில் புத்​தகங்​களை பெற்​றுக் கொள்​ளலாம். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT