கல்வி

7.5 சதவீத உள்ஒதுக்கீடு பொறியியல் சேர்க்கையில் 139 பேருக்கு ஆணை

செய்திப்பிரிவு

சென்னை: பொறி​யியல் படிப்​பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்​ஒதுக்​கீட்​டில் சிறப்பு பிரிவினருக்​கான ஆன்​லைன் கலந்​தாய்வு கடந்த 13-ந் தேதி நடந்தது.

இதைத்​தொடர்ந்​து, அவர்​களுக்கு தற்​காலிக ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு அதை உறு​திபடுத்த 14-ம் தேதி மாலை 5 மணி வரை வாய்ப்பு வழங்​கப்​பட்​டது. தற்​காலிக ஒதுக்​கீட்டை உறு​தி​செய்த 139 மாணவர்​களுக்கு நேற்று காலை 7 மணிக்கு கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை ஆன்​லைனில் வழங்​கப்​பட்​டது. அவர்​களில் 91 பேர் மாற்​றுத் திற​னாளி​கள். 38 பேர் விளை​யாட்டு வீரர்​கள், 8 பேர் முன்​னாள் ராணுவத்​தினரின் குழந்​தைகள் ஆவர்.

இந்த நிலை​யில், சிறப்பு பிரி​வினருக்​கான இணை​ய வழி பொது கலந்​தாய்வு நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்க மொத்​தம் 4,927 பேர் தகு​திபெற்​றுள்​ளனர்.

SCROLL FOR NEXT