என் பெயர் சரண்யா. நான் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் படித்து முடித்தேன். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவியாக, திறன் பயிற்சிகளுக்காக தனியாக செலவு செய்ய முடியாது என்ற ஒரு வரம்பு எப்போதும் இருந்தது.
அந்த நேரத்தில், எங்களுக்கு நான் முதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு திறன் பயிற்சி கட்டாயமாக சேர்க்கப்பட்டதால், கல்வியுடன் சேர்த்து தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறன்களையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது எனது துறைக்கு நேரடியாக இணைந்த பயிற்சி என்பதால், படித்து முடிந்தவுடன் வேலை தேடுவதற்கான நம்பிக்கை மேலும் உறுதியானது.
நான் இறுதி ஆண்டு முடித்தவுடன், நான் முதல்வன் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றேன். அதில் நடந்த என் முதல் நேர்காணலிலேயே Tech Mahindra-வில் பணிவாய்ப்பு பெற்றேன். நேர்காணல் ஒவ்வொரு நிலைக்கும் முன்பாகவும், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் எங்களுக்கு வழிகாட்டல், HR ரௌண்டுக்கு தேவையான பயிற்சி, தன்னம்பிக்கை அனைத்தும் கிடைத்தது. அதுவே எனது வெற்றிக்கு பெரிய காரணம்.
முன்பு மாணவர்கள் நிறுவனம் தோறும் சென்று வேலை தேட வேண்டிய சூழ்நிலையில் இருந்தோம். ஆனால் இன்று, நான் முதல்வன் திட்டத்தால் நிறுவனங்களே கல்லூரிக்கு வந்து திறன் மிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.
இன்று எனக்கு ஒரு சிறந்த வேலையும், நிலையான எதிர்காலமும் கிடைத்திருக்கிறது. நான் முதல்வன் என்னை போன்ற மாணவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு. இந்த திட்டம் என் வாழ்க்கையை மாற்றியதோடு, எங்கள் எதிர்காலத்துக்கு ஒளிவிளக்காக அமைந்துள்ளது.
இந்த அரிய வாய்ப்பை எங்களுக்கு அளித்த தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. மேலும் விவரங்களுக்கு: https://www.naanmudhalvan.tn.gov.in/
வெற்றி நிச்சயம்: என் பெயர் ஓபெத் அல் காசிம் ஷாஹுல் ஹமீத். நான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவன், வயது 22. பட்டப்படிப்பு முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த கடினமான காலத்தில், என் வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரு பெரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
வேலை தேடிக்கொண்டிருந்தபோது, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும் “வெற்றி நிச்சயம்” திட்டம் பற்றி அறிந்தேன். இந்த திட்டம் என் வாழ்க்கையின் உண்மையான திருப்புமுனையாக அமைந்தது. இந்த திட்டத்தின் மூலம், நான் செங்கல்பட்டில் உள்ள ASD Education Pvt. Ltd. நிறுவனத்தில் Logistics துறையில் Inventory Associate பணிக்கான 45 நாட்கள் சிறப்பு திறன் பயிற்சியை பெற்றேன். இதில் ஆங்கிலம் பேசும் திறன், கணினி பயிற்சி, தொழிற்சாலை பயண அனுபவம் போன்றவை அடங்கியது.
குறிப்பாக ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் பேசும் திறனை மேம்படுத்த நான் தொடர்ந்து உழைத்தேன். அதன் மூலம் என் பேச்சு, எழுத்து, செயல் அனைத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டது.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின், ASD Education Pvt. Ltd. நிறுவனத்தின் மூலமாகவே எனக்கு சிறப்பான வேலை வாய்ப்பு கிடைத்தது. தற்போது நான் துபாயில் PROSCAPE L.L.C நிறுவனத்தில் Store Keeper ஆக AED 1200 மாத சம்பளத்துடன் பணிபுரிகிறேன். மேலும், தங்குமிடம், உணவு, போக்குவரத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இது என் குடும்பத்தின் வாழ்வாதாரத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது.
இந்த வாய்ப்பு எனக்கு ஒரு வேலை மட்டும் அல்ல; என் கனவுகளுக்கான கதவுகளை திறந்துவைத்தது. இது என் வாழ்க்கையின் புதிய தொடக்கமாகும். என் பயணத்தை மாற்றியமைத்த இந்த வாய்ப்புக்காக, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். அவர்களின் உறுதியான ஆதரவு மற்றும் வழிகாட்டுதலின்றி இந்த மாற்றம் சாத்தியமாகியிருக்காது. மேலும் விவரங்களுக்கு: https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/