கோப்புப் படம் 
கல்வி

10-ம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு இன்று (பிப். 22) தொடங்கி பிப். 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்.15-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கான அறிவியல் செய்முறை தேர்வுகள் இன்று (பிப்.22) தொடங்கி பிப். 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. தேர்வுத் துறை வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி எவ்வித குளறுபடியுமின்றி குறிப்பிட்ட காலத்துக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு நடத்தப்படும் பள்ளியின் தலைமை ஆசிரியரே அந்த மையத்தின் தலைமைக் கண்காணிப்பாளராக செயல்பட வேண்டும். ஏதேனும் புகார் எழுந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப் பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT