கோப்புப் படம் 
கல்வி

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.2 முதல் 6-க்குள் அரையாண்டு செய்முறைத் தேர்வு

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகளை டிசம்பர் 2 முதல் 6-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கை: “அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகளை டிசம்பர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்” என அதில் அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT