விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காணொலி வாயிலாக கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 
கல்வி

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.12.29 கோடியில் 58 கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள் திறப்பு

எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.12.29 கோடியில் கட்டப்பட்ட 58 கூடுதல் பள்ளிக் கட்டிடங்களை இன்று (வெள்ளிக்கிழமை) காணொலி வழியே முதல்வர் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.12.29 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 15 கூடுதல் வகுப்பறைகள், அன்னியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 கூடுதல் வகுப்பறைகள், தேவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள், பில்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி 2 வகுப்பறைகள், அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பறை கட்டிடம், ஆட்சிப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள்,

முருங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பறை கட்டிடம், அகூர் அரசு 6-ம் வகுப்பறை கட்டிடம், கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பறை கட்டிடம் என 58 வகுப்பறை கட்டிடங்களை இன்று காணொலி வழியே முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் லட்சுமணன் எம்எல்ஏ புதிதாக கட்டப்பட்ட வகுப்பறையில் குத்துவிளக்கேற்றிவைத்து, பள்ளி மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத்தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், நகராட்சி ஆணையாளர் வீரமுத்துகுமார், நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், நகர்மன்ற உறுப்பினர்கள் மணவாளன், சிவகுமார், சாந்தகுமார், பத்மநாபன், கோமதி பாஸ்கர், தலைமை ஆசிரியர் சசிகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT