கோப்புப் படம் 
கல்வி

தமிழகத்தில் பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ.12.5 கோடி

செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ.12 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் எஸ்.மதுமதி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

பள்ளிக்கல்வித் துறையின்கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளிலும் (அரசு, உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகள்) படிக்கும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் குறுவட்ட, கல்வி மாவட்ட, மண்டல, மாநில மற்றும் தேசிய அளவில் 38 மாவட்டங்களிலும் 25 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தவும், அனைத்து வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் செஸ் போட்டியை நடத்தவும் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்தும் இதற்காக ரூ.12 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT