கோப்புப்படம் 
கல்வி

முதுநிலை மருத்துவ படிப்புகள் தொடங்க விண்ணப்பிக்க அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பு: எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்போது கல்லூரியில் உள்ள இளநிலை மருத்துவக் கல்வி இடங்கள், முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கான அங்கீகாரம் குறித்த தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

புதிய இடங்களை உருவாக்குவதற்கான அத்தியாவசிய சான்று மற்றும் உறுப்பு கல்லூரிக்கான ஒப்புதல் சான்று ஆகியவற்றை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து பெற்று, பெயர், வரிசை எண்களை தவறின்றி பதிவிட்டு விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்புக்கான வழிகாட்டு நெறிகளின்படி விண்ணப்பங்கள் இருத்தல் வேண்டும்.

SCROLL FOR NEXT