சென்னை பல்கலைக்கழகம் 
கல்வி

சென்னைப் பல்கலை. தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றன. இத்தேர்வுகளின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ideunom.ac.in) நாளை மாலை 6 மணிக்கு மேல் தெரிந்துகொள்ளலாம். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT