கல்வி

கற்றல் திறன் குறைந்த மாணவர்களுக்கு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம்வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் கற்றல் திறன் குறைந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்விஇயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் எழுதும்திறன், வாசிக்கும் திறன் மற்றும்அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்துஅவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள் ளது.

இதன் அடிப்படையில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களில் எழுதுதல், வாசித்தல் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவ, மாணவிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டு பயிற்சிகள் வழங்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களை எமிஸ் தளத்தில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுசார்ந்து அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.

SCROLL FOR NEXT