சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுஎழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்களை தேர்வுத்துறை இன்று (ஜூன் 24) வெளியிடுகிறது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: பத்தாம் வகுப்புக்கான துணைத்தேர்வு ஜூலை மாதம் நடைபெறஉள்ளது. இந்த தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தட்கல் உட்பட) ஹால் டிக்கெட்இன்று (ஜூன் 24) வெளியிடப்படுகிறது. இதையடுத்து தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுதவிர அறிவியல் பாடசெய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு ஜூன்25, 26-ம் தேதிகளில் தங்களுக்குபயிற்சி நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுக வேண்டும். அதேபோல், ஹால்டிக்கெட் இல்லாத தேர்வர்கள் தேர்வெழுத அனுமதி வழங்கப்படாது. எனவே,உரிய வழிமுறைகளை பின்பற்றிதனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மேலும், துணைத் தேர்வுக்கான விரிவான கால அட்டவணையை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.