மம்தா 
கல்வி

வானூர் அருகே ‘நீட்’டில் தேர்ச்சி பெற்றும் தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர் மகள்!

செய்திப்பிரிவு

விழுப்புரம்: இந்தாண்டு நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் 13 மொழிகளில் கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவு ஜூன் 5-ம் இரவு வெளியானது. இதில் 5 லட்சத்து 47 ஆயிரத்து 36 மாணவர்கள், 7 லட்சத்து 69 ஆயிரத்து 222 மாணவிகள், 10 திருநங்கைகள் என 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவிகள் உள்பட 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

அந்த வகையில் வானூர் அருகே நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வகுமாரின் மகள் மம்தா திண்டிவனத்தில் உள்ள அரசு நிதி உதவிபெறும் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து 579 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். மம்தாவுக்கு சிறு வயது முதலே மருத்துவராக வேண்டுமென்ற கனவு இருந்ததால் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நீட் கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

தற்போது வெளி வந்த நீட் தேர்வில் 558 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். இருந்த போதிலும் அரசு கல்லூரியில் சீட் கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் காத்துக் கொண்டுள்ளார். மேலும் தங்களது குடும்பத்தில் நிலவி வரும் வறுமை காரணமாக தனது படிப்புக்கு யாராவது உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இவரது தந்தை செல்வகுமாரின் செல்போன் எண் 8939710253.

SCROLL FOR NEXT