கல்வி

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவர் சேர்க்கையை ஜுன் 3-க்குள் உறுதி செய்ய உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தனியார் பள்ளிகளில் 25 சதவீதஇடஒதுக்கீட்டின் கீழ் இடம்கிடைக்கப் பெற்ற மாணவர்களின் பெற்றோர், சேர்க்கையை ஜுன் 3-ம் தேதிக்குள் உறுதிசெய்ய வேண்டும் என்று தனியார்பள்ளிகள் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநர் எம்.பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2024-25-ம் கல்விஆண்டில், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள 84,765 இடங்களுக்கு 1 லட்சத்து 74,756 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதைத்தொடர்ந்து, பரிசீலனைக்குப் பிறகு 1 லட்சத்து 57,767 விண்ணப்பங்கள் உறுதி செய்யப்பட்டன. 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவ்வாறு தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு ஒடிபி எண் அனுப்பப்பட்டு சேர்க்கை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சேர்க்கைக்கு தேர்வான மாணவர்களின் விவரம் அந்தந்த பள்ளி அறிவிப்பு பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது.

ஓடிபி எண் பெற்ற மாணவர்களின் பெற்றோர் ஜூன் 3-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று பள்ளி முதல்வரிடம் சேர்க்கையை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT