கோப்புப் படம் 
கல்வி

அரசு கலை கல்லூரி சேர்க்கை விண்ணப்பம் 2 லட்சத்தை தாண்டியது

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைபடிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுமே 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்துநடைபெற்று வருகிறது.

நேற்று மாலை 6 மணிநிலவரப்படி, இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரத்து 448 மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 815 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், பொறியியல் படிப்புகளில் சேர நேற்று மாலை6 மணி வரை, ஒரு லட்சத்தை 62 ஆயிரத்து 486 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT