12-ம் வகுப்பு பொதுத்ேதர்வில் சிறப்பிடம் பெற்று காவல்துறையின் விருந்தில் பங்கேற்ற மாணவர்களுடன் பெற்றோர். 
கல்வி

அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம்: காவல்நிலையத்தில் விருந்தளித்து கவுரவிப்பு @ திருபுவனை

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் திருபுவனை காவல்நிலைய சரகத்தில் உள்ளதிருபுவனை கலைஞர் அரசுமேல்நிலைப்பள்ளி, திருவண்டார்கோயில் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி ஆகியவற்றில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 6 மாணவ மாணவிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த மாணவர்கள், பெற்றோரை திருபுவனை காவல்நிலையத்துக்கு நேற்று வரவழைத்த போலீஸார், அவர்களுக்கு பேனா, திருக்குறள் புத்தகம் உள்ளிட்ட பொருள்களைப் பரிசளித்து, சால்வை அணிவித்து கவுர வித்தனர்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளிடம், “தொடர்ந்து சிறப்பாக பயின்று, அரசு பணிகளில் சேர்ந்து, உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்” என்று அறிவுரை வழங்கினர். பின்னர், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரை அமரவைத்து தலைவாழை இலைபோட்டு சைவ விருந்து அளித்தனர்.

இதுதொடர்பாக காவல்நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோவிடம் கேட்டபோது, கிராமத்தில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்து நல்ல நிலைக்கு வந்தவர்களில் நான் உட்பட பலரும் உண்டு. அரசுப் பள்ளிகளில் பயிலும்குழந்தைகளை இதுபோல ஊக்குவித்தால், அவர்கள் எதிர்காலத்தில்உயர்ந்த நிலையை அடைய முடியும்.

இவர்களை ஊக்கப்படுத்த, எங்கள் பகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்தோரை அழைத்து கவுரவித்தோம். கிராமப்பகுதியில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியரை ஊக்குவிப்பது நம் அனைவரின் கடமை” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT